×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வார்டு மறுவரையறையில் இடம் ஒதுக்கவில்லை

ஊத்துக்கோட்டை, டிச. 3:  ஊத்துக்கோட்டை  பேரூராட்சியில் வார்டு மறு வரையறை செய்ததில், பழங்குடியினர் போட்டியிட இடம் இல்லை. இதனால், இருளர் இன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளர்கள் 4,638 பேர், பெண் வாக்காளர்கள் 5,058 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர்.  இதில், கடந்த அக்டோபர் மாதம் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன.  அதில், பெண்களுக்கு 8 வார்டுகளும், ஆண்களுக்கு 7 வார்டுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.அப்படி பிரிக்கப்பட்டதில் ஆதிதிராவிடர்களுக்கு 2 வார்டுகள் (எஸ்.சி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,  பழங்குடியினருக்கு (எஸ்.டி)  பிரிவுக்கு இந்த முறை வார்டுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால், பழங்குடியின (இருளர்) மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதையறிந்த, பழங்குடியின மக்கள் கூறுகையில், ‘பழங்குடியின மக்களுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 3வது வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரூராட்சியில் வார்டு மறு வரையறை செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது’ என்றனர்.    

Tags : Ward ,Uthurakottai Baruarachchi ,
× RELATED மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள...